‘பொன்னியின் செல்வன்’ கதைய இன்னும் நீங்க படிக்கலயா?: 3 நிமிஷம் போதும்..நாவல் உலகின் மாஸ்டர் பீஸ் கதைய தெரிஞ்சுக்கலாம் இதோ…!!

தமிழில் வரலாற்று நாவல்களுக்கான ஓர் அகராதி, பல்கலைக்கழகம், மூல நூல் எல்லாமே பொன்னியின் செல்வன் தான்.

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒன்று. கடந்த 10 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் காலத்தில், ஆளும் குடும்பத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டம், ஆட்சி செய்யும் பேரரசரின் வாரிசுகளுக்கு இடையே வன்முறை பிளவுகளை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.

தமிழில் வரலாற்று நாவல்களுக்கான ஓர் அகராதி, பல்கலைக்கழகம், மூல நூல் எல்லாமே பொன்னியின் செல்வன் தான். அதற்குப் பிறகு தமிழில் வெளிவந்த அத்தனை வரலாற்று நாவல்களுக்கும் ஒரு பென்ச்மார்க் பொன்னியின் செல்வன் தான்.

சோழ வம்சத்தில் புகழ்பெற்ற பேரரசான ராஜராஜ சோழன் என்று அறியப்படும் அருள்மொழி வர்மர் காலத்தில் நடக்கும் கதை. கிட்டத்தட்ட 10ம் நூற்றாண்டில் நடக்கும் கதையில் வந்தியத்தேவன், ராஜராஜ சோழனின் தந்தை சுந்தரச் சோழர், அவரின் சகோதரி குந்தவை, சகோதரர் ஆதித்தர் கரிகால் சோழன், அநிருத்த பிரம்மராயர், நந்தினி, மந்தாகினி, ஆழ்வார்க்கடியான், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்கள் பல கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

சோழர் ஆட்சிக்காலத்தையே நம் கண்முன் கொண்டு வந்து அத்தனை கதாபாத்திரங்களையும் விரிவாக சொல்லியிரப்பார் கல்கி. வரலாற்றுச் சம்பவங்களோடு புனைவையும் கலந்து வெரைட்டி காட்டப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன், தமிழ் நாவல் உலகின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. பொன்னியின் செல்வன் புத்தகம் ஐந்து பாகங்களாகவும் ஆயிரம் பக்கங்களுக்கு மேலாகவும் பிரமாண்டமாக விரியும் படைப்பு இது. அவ்வளவு பெரிய கதையை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.

தன்னுடைய சகோதரி குந்தவைக்கும், தந்தை சுந்தர சோழருக்கும் காஞ்சியில் இருந்து வந்தியத்தேவனிடம் கடிதம் கொடுத்து அனுப்புகிறார் ஆதித்த கரிகாலன். வந்தியத்தேவனின் இந்தப் பயனத்தில் சோழ சாம்ராஜ்யத்தை கவிழ்க்க நடக்கும் சூழ்ச்சியை அறிந்துகொள்கிறார்.

இருவரிடமும் கடிதம் கொடுத்த பிறகு குந்தவை, ஈழத்தில் இருக்கும் அவருடைய இளைய சகோதரர் அருள்மொழிவர்மனுக்கு பொன்னியின் செல்வனுக்கு வந்தியத்தேவன் மூலமாக ஒரு தகவலை அனுப்புகிறார். பூங்குழலியின் படகில் ஈழத்தை அடையும் வந்தியத்தேவன், அருள் மொழி வர்மரிடம் குந்தவையின் தகவலைச் சேர்க்கிறார். அருள் மொழி வர்மரை, குந்தவையின் வேண்டுகோள்படி வந்தியத்தேவன் தஞ்சைக்கு அழைக்க, பார்த்திபேந்திரன் காஞ்சிக்கு அழைக்க, ஆழ்வார்க்கடியான் ஈழத்திலேயே இருங்க என சொல்ல குழப்பத்தில் இருக்கிறார் அருள்மொழி வர்மர்.

இந்தக் குழப்பங்களுக்கு இடையில் பழுவேட்டரையர் வீரர்கள் இளவரசரை சிறை செய்ய ஒரு கப்பலில் வர, அவர்களிடம் வந்தியத்தேவன் சிக்க, இளவரசர் அவரை மீட்க இன்னொரு கப்பலில் செல்ல சரியான நேரம் பார்த்து புயல் வர, அந்தப் புயலில் இரு கப்பல்களும் சிக்க, புயலிலிருந்தும் எதிரிகளிடமிருந்தும் மீண்டு கடலில் இளவரசரும் வந்தியத்தேவனும் மிதக்க, பூங்குழலி அவர்களை கரையேற்றுகிறாள்.

புயலில் இருந்து மீண்டவரை நோய் தாக்க, அருள்மொழி வர்மருக்கு நாகையில் புத்தவிகாரையில் சிகிச்சை நடைபெறுகிறது. இளவரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவ, அரசவையைக் கைப்பற்றும் சூழ்ச்சியில் இருந்து மீளும் வரை இளவரசரை தலைமறைவாக இருக்கும் படி குந்தவை கட்டளையிடுகிறார். இன்னொருபுறம் பாண்டிய ஆபத்துதவிகள், நந்தினி, சபலப்பட்ட சிற்றரசர்கள் என ஒரு எதிர்ப்புரட்சிப் படை சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிராக உருவாகும் சதித்திட்டத்தை முறியடிக்க அருள்மொழிவர்மர் யானை மீதேறி வந்து சோழ சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்துவார்.

சூழ்ச்சியை ஓரளவுக்கு அறிந்த வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்குச் செல்ல வேண்டாம் எனத் தடுக்கிறார். அவர் முயற்சி வீணாக, ஆதித்த கரிகாலர், பார்த்திபேந்திரன், வந்தியத்தேவன், கந்தமாறன் அனைவரும் கடம்பூர் மாளிகைக்குச் செல்கிறார், இறுதியில் ஆதித்த கரிகாலன் நந்தினியைச் சந்திக்கிறார்.

மந்தாகினி தேவி சாயலில் இருக்கும் நந்தினி, அதைப்பயன்படுத்தியே சுந்தரச் சோழரைக் கலக்கத்திலேயே வைத்திருக்க, இந்த சதியை முறியடிக்க மந்திரி அநிருத்தர் மந்தாகினியை தஞ்சைக்கு அழைத்து வர முயற்சிக்க, சில பல குழப்பங்களுக்குப் பிறகு பூங்குழலி மந்தாகினி தேவியின் இடத்தில் இடமாறி வர, மந்தாகினி தேவி அரசர் சுந்தர சோழரை சந்திக்கிறார். ஒரே நாளில் அரசரையும், இளவரசர்களையும் படுகொலை புரிய இருக்கும் பாண்டிய ஆபத்துதவிகளின் சதித்திட்டம் பெரிய பழுவேட்டரையருக்குத் தெரிய வர, சுந்தர சோழரை மாந்தாகினி தேவி உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார்.

சதித்திட்டத்தில் அருள் மொழிவர்மர் தப்பிக்கிறார், ஆதித்தர் பலியாகிறார், பழியோ வந்தியத்தேவன் மீது. மக்களின் ஆதரவுடன் அருள் மொழிவர்மர் முடிசூட, வந்தியத்தேவன் தன் மீதான பழியைத் துடைத்தெறிய முற்றுபெறுகிறது பொன்னியின் செல்வன்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

13 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

14 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

15 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

15 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

15 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

17 hours ago

This website uses cookies.