அறக்கட்டளையின் பின்புறம் கிடந்த ‘அந்த’ மாத்திரைகள்… பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 1:05 pm

விழுப்புரம் அருகே அன்பு ஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அடுத்த கட்ட விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சிபிசிஐடி எஸ்.பி அருண்கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட குழு மற்றும் 4 தடவியல் குழு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் தடவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் உள்ளிட்டோறும் தடயங்களை சேகரித்து அங்குள்ள பாய்களில் ரத்த கரைகள் இருந்ததை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அன்பு அறக்கட்டளை ஆசிரமம் சுற்றி மாத்திரைகள் மற்றும் துணிகளை எரித்துள்ளனர் அதனையும் தடவியல் துறையினர் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சி பி சி ஐ டி போலீசார் மூன்று மாடி கட்டிடங்களில் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!