பத்திரிக்கையாளரின் கன்னத்தில் அறைந்த அயனாவரம் தாசில்தார் : போலீசில் புகார்… வைரலாகும் வீடியோ…

Author: Babu Lakshmanan
15 September 2022, 1:09 pm

சென்னை : பத்திரிக்கையாளரை அயனாவரம் தாசில்தார் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஆங்கில பத்திரிகை செய்தியாளர் ஒருவர் நில பட்டா தொடர்பாக அயனாவரம் தாசில்தாரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாசில்தார் தன் கண்ணத்தில் தாக்கியதாக பத்திரிகையாளர் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அயனாவரம் தாசில்தார் பத்திரிகையாளரை கன்னத்தில் அடிக்கும் அந்த வீடியோவானது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து டிபி சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி