இறந்த பின்பும் உயிர் வாழும் டெய்லர்… மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்.. நெகிழ வைத்த சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan10 September 2024, 10:21 am
திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவர் கடந்த 7-ஆம் தேதி இரவு சாலை கடக்க முயன்ற போது வாகன மோதி படுகாயம் அடைந்தார்.
இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகுமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவக்குமாருக்கு மூளை சாவு ஏற்பட்டது. இது குறித்து அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கூறப்பட்டதோடு, உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, அவரது இருதயம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்த சிவகுமார் உடலுக்கு மருத்துவமனை நிர்வாகம் அரசு மரியாதை செலுத்தி உடலை அனுப்பி வைத்தனர்.