ஓவியாவை உடனே கைது செய்யுங்க… திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்த தமிழக பாஜக!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2024, 4:10 pm

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சையாக பேசி சிக்கியவர் நடிகை கஸ்தூரி. அவர் மீது தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் வழக்குப்பதியப்பட்டது.

இதையடுத்து தலைமறைவான கஸ்தூரி, முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவருக்கு முன்ஜாமீக் கொடுத்த நீதிபதி மறுத்தார்.

இதையடுத்து தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வந்த நிலையில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த அவர் கடந்த 17ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Actress Kasthuri Released

தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, தனது 2வது குழந்தை ஆடிஸம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், நான் தான் கவனிக்க வேண்டும், அதுவும் Single Parent என கூறி ஜாமீன் கேட்டார்.

இதையும் படியுங்க: அடிமடியில் கை வைத்த வீட்டோட மாப்பிள்ளை : கைவரிசை காட்டியதால் கம்பி எண்ணும் மருமகன்!

இதற்கு தமிழக காவல்துறை எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காததால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

இந்த நிலையில் இது குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது X தளப் பதிவில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக சொல்லி துடி துடித்து நடிகை கஸ்தூரியை கைது செய்து நீதியை நிலை நாட்டியதாக மார் தட்டிக்கொண்ட தமிழக அரசு, நம்முடைய தமிழ் மக்களான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை அவதூறாக, கேவலமாக, தரம்தாழ்ந்து பேசிய சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் என்று அழைக்கப்படும் ஓவியாவை கைது செய்யாமல் அமைதி காப்பது ஏன்?

Bjp Give Pressure To DMK Government for Arrest Oviya

மிக கேவலமாக அச்சமுதாய மக்களின் பிறப்பு குறித்து பேசியும் இது வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? உடனடியாக வன்கொடுமை சட்டத்தில் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் (PCR) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெலுங்கு மக்கள் மீது உள்ள அன்பும், பாசமும் ஏன் தமிழர்கள் மீது அதுவும் பட்டியலினத்தவர் மீது இல்லை? ஓ!! நீங்கள் நீதிக்கட்சியின் நீட்சி என்பதால் தானா? என
நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 179

    0

    0