ரூ.15 ஆயிரம் எடுத்து வை.. லஞ்சம் கேட்ட நில அளவையர் : வாங்கும் போது சிக்கிய வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2024, 1:32 pm

திண்டுக்கல் மேற்கு மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நிலப் பதிவுகள் துறை ஆவண காப்பகத்தில் நில அளவை பிரிவில் உள்ள சர்வேயர் பாக்கியராஜ் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கும் பொழுது கையும் கழுவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பிடித்துள்ளனர். மேலும், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் ஆர்.எம் காலனி பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் தனிபட்டா வேண்டி விண்ணப்பித்துள்ளார்.

இது தொடர்பாக மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நிலப் பதிவுகள் துறை ஆவண காப்பகத்தில் பணிபுரியும் நில அளவை பிரிவில் உள்ள சர்வேயர் பாக்கியராஜ் சந்தித்துள்ளார்.

இதனையடுத்து தனிபட்டாவிற்காக பாக்கியராஜ் அவரது தனிப்பட்ட உதவியாளர் சதீஷ் மூலமாக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக பின் கடைசியாக ரூ.15 ஆயிரம் இறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து கணேஷ் குமார் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் லட்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் லட்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் கலந்த பணத்தினை கணேஷ் குமாரிடம் கொடுத்து சர்வேயர் பாக்கியராஜ் உதவியாளர் சதீஷ் (தனிப்பட்ட) இடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளனர்.

இதன் படி கணேஷ்குமார் பணத்தை சர்வேயர் பாக்கியராஜ் உதவியாளர் (தனிப்பட்ட) சதீஷ் இடம் கொடுக்கும் பொழுது அவரை கையும் கழுவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை தொடர்ந்து பாக்கியராஜ்-யை பிடித்துள்ளனர். மேலும், நில அளவை அலுவலகத்தை முழுமையாக சோதனை செய்து சர்வேயர் பாக்கியராஜ் மற்றும் உதவியாளர் (தனிப்பட்ட) சதீஷ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!