வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுங்க… மத்திய இணையமைச்சரை நேரில் சந்தித்து மனு!!
Author: Udayachandran RadhaKrishnan5 November 2023, 8:28 pm
வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுங்க… மத்திய இணையமைச்சரை நேரில் சந்தித்து மனு!!
மக்கள் பங்களிப்பு, நமக்கு நாமே இட்டத்துன் மூலமாக வெள்ளலூர்
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு கோவை மாநகராட்சி
ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்த கோரி கோவை வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்களிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டது.
அதில், மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மத்திய அமைச்சர் அவர்களுக்கு வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழு சார்பில் ஏற்கனவே நிறுத்த வைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி நடத்த கோரிக்கை மனு தரப்பட்டது.
தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மீண்டும் பணி துவக்கி நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது. அரசு இன்னும் பாராமுகமாக இருக்கிறது.
ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் தேவை என்பது மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் எந்த தேவையாக இருந்தாலும் எங்கே செல்ல வேண்டி இருந்தாலும் நகரின் மையப்பகுதிகளில் உள்ள காந்திபுரம் உக்கடம் சிங்காநல்லூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்டுகளுக்கு சென்று வர வேண்டி இருக்கிறது.
கடும் போக்குவரத்து நெரிசல் , காலதாமதம், ஓரே பகுதியில் அதிக மக்கள் கூடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைவதன் மூலமாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். பைபாஸ் ரோடு மற்றும் புதிதாக பணி துவக்கப்பட்ட ரிங் ரோடு மூலமாக வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மக்களின் போக்குவரத்து பயணத்தை மிக எளிதாக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கோவையின் மிக முக்கிய அடையாளமாக பெயர் சொல்லும் இடமாக
இருக்கக்கூடிய வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் இட்டம் முடக்கி வைத்து
மூடுவிழா நடத்தப்பட்டது.
168 கோடி ரூபாய் மஇப்பீட்டில் சுமார் 40% பணிகள் முடிந்த நிலையில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி எந்த காரணமும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.
நிதியில்லை என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொது மக்களின் பங்களிப்புடன் நடத்தக்கூடிய நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை நிறைவேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.
இல்லாவிட்டால் பஸ் ஸ்டாண்ட் மீட்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் நிதி
திரட்டி கட்டுமான பொருட்களை பெற்று தர தயாராக இருக்கிறோம்.
அதன் மூலமாக மீதமுள்ள பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு
கொண்டுவரலாம்.
வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கோவையின் உன்னத அடையாளமாக இருக்கும். பல்வேறு தரப்பினரும் பொதுமக்களும் வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு கருத்தில் கொண்டு போதுமான நி௫இகளை ஒதுக்க பணிகளை தொடர்ந்து நடத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு நாமே திட்டம், பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய இதர இட்டங்கள் மூலமாக பணிகளை தொடர்ந்து நடத்த ஒப்புதல் தர வேண்டும். மக்கள் கோரிக்கையை மாவட்ட
நிர்வாகம் மனது வைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர முன்வர
வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்டுறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகாமையில் இருக்கும் பகுதகளில் கடும் துர்நாற்றம் வீசுவது குறித்தும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.
அதில், கோவை மாநகராட்சி மூலம் தினசரி தரம் பிரிக்கப்படாத சுமார் 1000 டன் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்களாகிய நாங்கள் கடந்த பல வருடங்களாக எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறோம்,எண்ணற்ற வாக்குறுதிகள் இதை செய்கிறோம், அதை செய்கிறோம் என்று கடந்த காலங்களில் கோவை மாநகராட்சி நிர்வாகம் மூலம் அளிக்கப்பட்டது.
ஆனால் இன்றுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை திடக்கழிவு சட்டம் 2016ன் படி முறைப்படி குப்பைகளை தரம் பிரித்து அந்தந்த இடங்களியே மேலாண்மை செய்யாத காரணத்தால் துர்நாற்றம், நிலத்தடி நீர் மாசு, விபத்து போன்ற பல பிரச்சனைகள் போத்தனூர், வெள்ளலூர் பகுதியில் வசிக்கும் இலட்சக்கணக்கான பொதுமக்கள் இனமும் சந்தித்து வருகிறார்கள்.
எனவே எங்கு குப்பை உற்பத்தி ஆகிறதோ அந்த இடத்திலேயே குறிப்பாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் குப்பை மேலாண்மை செய்ய தாங்கள் கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் அறிவுரை வழங்கவேண்டும் என்றும் மேலும் எங்களது பழமையான ஊர்களான போத்தனூர் மற்றும் வெள்ளலூர் பகுதிகள் மேம்பட மற்றும் இங்கிருக்கும் பொதுமக்கள் நிம்மதியாக வாழ வகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.