நடுரோட்டில் கிடந்த மனிதத் தலை.. மதுரையில் காலையிலேயே பரபரப்பு!

Author: Hariharasudhan
14 November 2024, 12:28 pm

மதுரை நத்தம் பிரதான சாலையில் துண்டாகக் கிடந்த மனிதத் தலை குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை: மதுரை மாவட்டம், நாகனாகுளம் கண்மாய் அருகேஉள்ள நத்தம் பிரதான சாலையில் உடல் இல்லாமல் தலை மட்டும் துண்டாகி கிடந்து உள்ளது. இதனை, இன்று (நவ.14) அதிகாலை, அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

பின்னர், இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கு கிடந்த தலையைக் கைப்பற்றினர். இந்தத் தலையை ஆய்வகத்துக்கு அனுப்பி, பின்னர் பிரேதப் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

POLICE STATION

இதனிடையே, துண்டான தலை கிடந்த இடத்துக்கு மோப்ப நாயை அழைத்து வந்த காவல் துறையினர், அந்த நாய் சென்ற வழித்தடத்தில் கிடைக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் நாய் சற்று பயந்து ஓடியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: நாங்கள் மட்டும் என்ன? மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தின் மறுபக்கம்!

மேலும், காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நத்தம் பிரதான சாலையில் துண்டாகிக் கிடந்த தலை 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் தலையாக இருக்கலாம் என தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, சாலையில் கிடந்த தலை யாருடையது, அவர் கொலை செய்யப்பட்டாரா, கொலை செய்யப்பட்ட நபரின் தலையைத் துண்டாக்கியது யார், அதனை இந்த சாலையில் கொண்டு வந்து போட்டது யார் என்பது குறித்து தல்லாகுளம் காவ துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Yuzvendra Chahal and Dhanashree relationship நடிகையை விவாகரத்து செய்ய போகிறாரா பிரபல கிரிக்கெட் வீரர்..இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!
  • Views: - 361

    0

    0