பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது அந்த பிரபல நடிகையா.? செம குஷியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
2 June 2022, 5:48 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்துள்ளது. இந்நிலையில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதமுள்ள வாரம் சிம்புவால் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, 7 சீசன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று, தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடித்துள்ளன. இதில், கடந்த மூன்று சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நகர்ஜூனா, 6 சீசன் ஐ தொகுத்து வழங்க வில்லை என்று கூறிவிட்டார்.

ஏற்கனவே கடந்த 2020ல் நகர்ஜூனா ஷூட்டிங் சென்ற போது சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அது மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. எனவே, இந்த முறை முழு தொகுப்பாளராக தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்க பிரபல தமிழ் நடிகை சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!