கணவரை பிரிந்து வாழும் பிரமாண்ட இயக்குனரின் மகள்.? சந்தோசத்தை இழந்து தவிக்கும் குடும்பம்..!

Author: Rajesh
16 May 2022, 5:53 pm

தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் பார்க்க வைத்தவர் தான் இயக்குனர் சங்கர். இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் வாழ்வில் ஏற்படும் அன்றாட பிரச்சனைகளை மையப்படுத்தியே கதைகளத்தை அமைத்திருப்பார். இதனிடையே இவருடைய இளைய மகள் அதிதி கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் இவருடைய மகனும் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் பயிற்சியாளர் ரோஹித் என்பவருடன் சென்ற ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

இதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தலாம் என ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், சங்கர் அதனை நிறுத்தி விட்டார். அதற்கு காரணம் அவரது மருமகன் தான். ரோகித் தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பெயரில் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

இதனால் சங்கரின் மொத்த குடும்பமும் சந்தோசத்தை இழந்து தவித்து வருகின்றனர். இப்போது ஐஸ்வர்யாவுக்கும், ரோஹித்க்கும் விவாகரத்து செய்ய சங்கர் குடும்பத்தினர் யோசித்து வருகின்றனர். ஆனால் விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் திருமணமாகி ஆறு மாதங்களாவது ஆகி இருக்க வேண்டும்.
இதனால் சில மாதங்கள் முடிந்தவுடன் விவாகரத்திற்கு பதிவு செய்ய வேண்டும் என்ற முடிவில் சங்கர் குடும்பம் உள்ளனர். மேலும், மேலும் இப்படி ஒரு சம்பவம் தன் குடும்பத்தில் நிகழ்ந்து விட்டது குறித்து அவரது நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டு வருகிறாராம் சங்கர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 1648

    0

    0