The Legend Review… படம் நல்லாதான் இருக்கு… ஆனா, ஒரு 2hrs கட் பண்ணா போதும்..!
Author: Rajesh28 July 2022, 11:38 am
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானார் லெஜன்ட் சரவணன் அருள். தனது விளம்பரத்தில் கோலிவுட் முன்னணி நாயகிகளை களமிறங்கிய இவரின் நடனம் மட்டும் மேக்கப் உள்ளிட்டவை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இருந்தும் மனம் தளராத சரவணன் அருள் தற்போது நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக அவரது விளம்பரங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி என இரண்டு இயக்குனர்கள் தான் தி லெஜண்ட் படத்தை இயக்கியுள்ளார்.

ஜேடி – ஜெரி இணைந்து இயக்கி சரவணன் அருள் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தி லெஜண்ட். சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில் பிரபு, விஜயகுமார், விவேக், Urvashi Rautela, சுமன், நாசர், யோகி பாபு, மயில்சாமி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இயக்குனர்கள் ஜேடி -ஜெர்ரியின் இயக்கம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். நன்றாக செல்லும் திரைக்கதையில் தேவையில்லாத பாடல்கள், காட்சிகள் வைத்திருப்பது சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சில சலிப்பை மனதை தொடுகிறது. பின்னணி இசை படத்திற்கு பக்காவாக இருக்கிறது. ஆனால், ரூபனின் எடிட்டிங் ஒர்கவுட் ஆகவில்லை என்று தான் சொல்லணும். மேலும், எதிர்பார்த்த ரசிகர்களுக்கு படம் ஏமாற்றம் என்றே சொல்லலாம்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});#TheLegend Reviews : “அஜித், ரஜினி, கமல் எல்லாம் வேற டா நடிக்குறப்போ சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விஜய் மாதிரி லூசுதனம் பண்ணிவெச்சிருக்கார்”
— மிஸ்டர்.உத்தமன் (@MrUthaman) July 28, 2022
The Legend = Beast pic.twitter.com/1XmXL7AmDX