கேப்டன் விஜயகாந்த் பெயரில் இனி விருதுகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நேற்று மதியம் அவரது உடல் வைக்கப்பட்டது.
இரவு முழுவதும் விடிய விடிய விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சாரைசாரையாக படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இன்று அதிகாலை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்தின் உடலுக்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், பார்த்திபன், ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், சுந்தர்.சி, பாக்கியராஜ், சாந்தனு மற்றும் நடிகை குஷ்பூ, நளினி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பல பிரபலங்கள் சமூகவலைதளங்களில் இரங்கலை தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்வதற்காக விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் பெயரில் இனி விருதுகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அதாவது,
திரைத் துறையிலும் அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் செய்த காலத்தால் அழியாத சாதனைகளை பறை சாற்றும் விதமாக, இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், மற்றும் செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் அவர்கள், சென்னை மேயர் ப்ரியா ஆகியோருக்கு வேண்டுகோளாக முன் வைக்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.