மனுநீதி சோழனை விட சிறந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்: குட்டிக் கதை சொன்ன அமைச்சர் எ.வ.வேலு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2024, 3:59 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாக்கம், அத்தியூர், அரியலூர், வானாபுரம், எகால், ஏந்தல், பொற்பாலம்பட்டு, அவிரியூர் பெரியபகண்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது 1 மதத்திற்குள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு தமிழ்நாட்டை ஆண்ட பல்வேறு சோழ மன்னர்களில் ஒருவர் மனுநீதிச் சோழன் மனுநீதிச் சோழன் என பெயர் வர காரணம் மன்னர் ஒரு நாள் அமைச்சர்களை கூப்பிட்டு மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என நான் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு ஒரு எளிய வழிமுறையை கூறுங்கள் என கூறியதாகவும் அதற்கு அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து கோட்டையின் முன்பு ஒரு மணியை வைக்க வேண்டும்.

பிரச்சனை உரிய நபர்கள் அந்த மணியை அடித்து அவர்களது பிரச்சனைகளை கூறினால் உடனடியாக அமைச்சர்கள் தரப்பு சென்று அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கலாமென அறிவுறுத்தினார்கள்.

இதனால் தான் அவருக்கு மனுநீதிச் சோழன் என பெயர் வந்தது. ஆனால் அவரை விட ஒரு படி மேலே போய் தமிழ்நாடு முதலமைச்சர் உங்களின் பிரச்சனைகளை உங்களிடமே தேடி வந்து மனுக்களாக நாங்களே பெற்றுக் கொள்ளும் வகையிலும் அவரே நேரடியாக வந்து பெரும் வகையிலும் இந்த முத்தான திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

எனவே மனுநீதிச் சோழனை விட தமிழ்நாடு முதலமைச்சர் சிறந்தவர் என இந்த குட்டி கதையின் மூலமாக விளக்கிக் கூறினார். இந்த நிகழ்ச்சியில், சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட வருவாய்த்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!