ஒரே உணவு, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு ஏன்? கேரளாவில் நடந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரபர பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 6:50 pm

கேரளா திருவனந்தபுரத்தில் நடை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசியவதாவது: ஜிஎஸ்டி மூலம் நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டது. நீட் தேர்வு மூலம் கல்வி உரிமைகளும் பறிக்கப்படுகிறது.இந்தியை திணிக்கும் முயற்சியே, தேசிய கல்வி கொள்கை ஆகும். நாட்டை காப்பாற்ற வேண்டுமாணால் அனைத்து மாநிலங்களும் காப்பாற்ற வேண்டும். பா.ஜ., அரசால் மக்கள் விரோத சட்டங்கள் கொண்டுவரப்படுகிறது.

அனைத்து மொழிகளையும் காப்பாற்ற வேண்டும். இந்தியாவை ஒற்றுமை படுத்தும் மந்திர சொல் தான் கூட்டாட்சி. நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை, மத்திய அரசு சட்டத்தின் மூலம் நிறைவேற்ற முயற்சி செய்கிறது.

ஒரே உணவு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என நோக்கி சென்றால் ஒரே கட்சியாகி விடும். இதற்கு எதிரான குரல் தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

  • Pradeep Ranganathan meets Aamir Khan வாழ்க்கை ஒரு வட்டம்…திடீரென ஆமீர் கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன்.!