தமிழக முதல்வரானார் விஜய்.. தலைப்பு செய்தியுடன் வெளியான போஸ்டர் : இது லிஸ்டுலயே இல்லையே!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2023, 2:42 pm

தமிழக முதல்வரானார் விஜய்.. தலைப்பு செய்தியுடன் வெளியான போஸ்டர் : இது லிஸ்டுலயே இல்லையே!!

நடிகர் விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகியுள்ளது. வரும் 19ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சமீபத்தில், தன் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்திய நிலையில், அவ்வப்போது, மக்கள் இயக்க மகளிரணி, வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கு தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இது விஜய்யின் அரசியல் வருகைக்கான முன்னேற்பாடுகள் என்று கூறப்படும் நிலையில், ” மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதில்,2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது….மத்தியில் மோடியின் நல்லாட்சி, மா நிலத்தில் விஜய்யின் மக்களாட்சி, தொலைபேசியில் பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்து…தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தது. கூட்டணி கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி” என்று மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு தலைமை தளபதி மக்கள் இயக்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் போஸ்டருக்கு தனி மவுசு உண்டு. தற்போது இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்பாடுத்தியுள்ளது, மேலும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை கிளப்பியுள்ளது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!