ஆளுநர் ஆர்என் ரவியுடன் தமிழக தலைமை செயலாளர் சந்திப்பு.. ராஜ்பவனில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2024, 7:30 pm

தமிழக ஆளுநர் ஆர்என் ரவியுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் சந்தித்து பேசினார்.

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்துள்ளார். தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அப்போது, தலைமைச் செயலாளர் உடன், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் உடன் சென்றுள்ளார்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!