சென்னையில் துப்பாக்கியுடன் தமிழக காங்கிரஸ் பிரமுகர் அதிரடி கைது… கார் பறிமுதல்…பரபரப்பு!!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2023, 9:16 pm

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் அஸ்வத்தாமன் இதற்கு முன்னதாக மாணவர் காங்கிரஸ் தலைவராக பதிவு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெங்களூரில் இருந்து தனது காரில் அவர் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, ஆவடி சரக போலீசார் அவருடைய காரை வழிமறித்து அதில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனையில், அஸ்வத்தாமன் வந்த அந்த காரில், உரிமம் இல்லாத துப்பாக்கி ஒன்றும், சில தோட்டாக்ளும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த காரில் இருந்த அஸ்வத்தாமன் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஸ்வத்தாமன் உள்ளிட்ட மூன்று பேரும் அதன் பிறகு கைது செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆவடி சரக போலீசார், காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் காங்கிரஸில் முக்கிய பதவியில் இருக்கும் திரு. அஸ்வத்தாமன் உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளது தற்பொழுது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 376

    0

    0