பாகிஸ்தானை போல் இந்தியாவை பிளவுபடுத்தப் பார்க்கிறார் அமித்ஷா: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு..!!
Author: Rajesh11 ஏப்ரல் 2022, 6:06 மணி
கோவை: பாகிஸ்தான் நாடு மொழி திணிப்பால் பிளவுற்று உள்ளதை போல், இந்தியை திணித்து இந்தியாவை பிளவுபடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா இறங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோல் டீசல் மற்றும் கியாஸ் விலையை கட்டுப்படுத்த கோரியும், ஜி.எஸ்.டி வரியை குறைக்க கோரியும் கோவையில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் 56 பேர் கோவையிலிருந்து சென்னைக்கு 18 நாட்கள் 550 நடைபயண பேரணி மேற்கொள்கின்றனர்.
இந்த பேரணியை கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியசைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது, நடைபயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டு. கியாஸ் விலையை குறைக்க வேண்டும்.
இந்த பேரணியை துவக்கி வைக்க கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகி சனல் என்பவர் இங்கு வந்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இது கட்சிக்கும், நமக்கும் பலன் அளித்துள்ளது. 900 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியதால் ஆயுள் நீடித்தது, இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் உழைக்க முடியும்.
ஜி.எஸ்.டி வரியை காங்கிரஸ் கொண்டு வந்தது. ஆனால், குறைந்தபட்ச வரியை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அப்போதையை எதிர் கட்சியாக இருந்த பா.ஜ.க எற்றிப்பு தெரிவித்துவிட்டு, தற்போது 18 சதவீதத்திற்கு மேல் வரி விதித்துள்ளனர்.
இந்தி மொழி 75 சதவீதம் அரசு ஆட்சி மொழியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தெரிவிக்கிறார்.
இந்தி பேசும் மக்களின் ஆதரவுடன் முன்னாள் பிரதமர் நேரு ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக கொண்டுவந்தார்.
பாகிஸ்தானில் இதே போல் மொழியை திணித்த காரணத்தால் தான் இரு மொழி நாடாக பிளவுற்று உள்ளது. அதே போல் இந்தியை திணிக்கும் முயற்சியில் அமித்சா இறங்கியுள்ளார்.
மொழி கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும். இலங்கையில் ஆட்சி செய்யும் திறமை இல்லாத காரணத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கை பிரச்சனையும் இந்தியா பிரச்சனையும் வேறு.
இந்தியா பொருளாதார வீழ்ச்சி அடைய காரணம் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வால் தான். மேலும், ரூ.26 லட்சம் கோடி வரி விதிப்பும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0
0