1300க்கு கீழ் குறைந்த தமிழக கொரோனா பாதிப்பு : 3 மாவட்டங்கள் மட்டுமே Highlight… இன்றைய தமிழக நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2022, 7:05 pm

சென்னை : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500க்கும் கீழ் குறைந்துள்ளது.

அதாவது, 1,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 41 ஆயிரத்து 783ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 772 ஆக குறைந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,962 ஆக அதிகரித்துள்ளது. 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.

இன்று 4,768 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 80 ஆயிரத்து 049 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 285 பேருக்கும், கோவையில் 214 பேருக்கும், செங்கல்பட்டில் 105 பேருக்கும், திருப்பூரில் 57 பேருக்கும், சேலத்தில் 48 பேருக்கும், ஈரோட்டில் 69 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1546

    0

    0