தமிழக வெள்ள பாதிப்பு… பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை : நிவாரணத் தொகை குறித்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!
தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அந்த ஆற்றின் கரையோர பகுதி மக்கள் வெள்ள பாதிப்பால் மிகுந்த பெரிதளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்த இரு வெள்ள பாதிப்புகளில் இருந்தும் மக்கள் இன்னும் முழுதாக வெளிவரவில்லை.வெள்ள நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிவாரண நிதியை தமிழக அரசு கேட்டுள்ளது. அதன் காரணமாக மத்திய குழுக்கள் தமிழகம் வந்து இரு வெள்ள பாதிப்புகளையும் ஆய்வு செய்து தரவுகளை சேகரித்து சென்றனர்.
தற்போது வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் மத்திய குழு இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. இதனை அடுத்து இன்று பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்கள், பேரிடர் மீட்பு படை வீரர்கள் தேவைப்படுகிறதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அடுத்து தேவைப்படும் நிவாரண உதவிகள், நிவாரணம் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.