2ஆம் புலிகேசி ஸ்டாலின்… தமிழக அரசு ஒரு நாடக அரசு : அதிமுக எம்பி சி.வி.சண்முகம் ஆவேசப் பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan19 May 2023, 4:11 pm
அதிமுக கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி மற்றும் சாராய குடித்து உயிரிழந்த விவகாரத்தினை அதிமுக சார்பில் நடைபெற உள்ள பேரணி குறித்த கூட்டம் விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் விழுப்புரம், செங்கல்பட்டு, தாண்டி, திண்டிவனம், விழுப்புரம் விஷ சாராயம் அருந்தி இறந்த சம்பவத்தில் கூலி தொழிலாளிகளை தான் கைது செய்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் யார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய அவர் திண்டிவனத்தில் திமுக கவுன்சிலர் கணவர் சாராயம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுகிறார்.
ஆனால் கட்சியிலிருந்து ஏன் நீக்கப்படவில்லை என்றும் தமிழகதில் சாராயம், கஞ்சா வியாபாரி சாம்ராஜியம் விரிவடைந்துள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் நிர்வாக திறமையற்ற ஆள தெரியாத முதல்வராகவும் ஸ்டாலின் என்ன நடக்கிறது என்றே தெரியாத அவருக்கு தெரியவில்லை என கூறினார்.
விற்பனை செய்யப்பட்டது கள்ளச்சாரய்ம் இல்லை மெத்தனால் கலந்த விஷ சாரயம் என டிஜிபி ஒரு விளக்கதை கொடுக்கிறார். மெத்தனால் குறித்த கண்காணிப்பு இல்லை என்றும் மெத்தனால் சாராயத்தினை 2ம் புலிகேசி போல கண்டு பிடித்துள்ளது ஸ்டாலின் ஆட்சி.
கள்ளச்சாரயத்தை தடுக்காத தமிழக அரசின் அனுமதியோடு சாராயத்தை விற்பனை செய்வதாகவும் விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையேயான பிரச்சனை 2 மாதங்களாக நடைப்பெற்று வரும் நிலையில் நடவடிக்கை எடுக்காத அமைச்சர் பொன்முடி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பிரச்சனையை திசை திருப்ப, திட்டமிட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
தமிழக அரசு நாடக அரசு என்றும் அதில் முதல்வர் நாடக நடிகர் என்றும்
22 பேர் மரணமடைந்தும் தமிழக அரசு விழித்துக்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினார்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் மதுவிலக்கு தொடர்பாக அதிமுக போராட்டம் நடத்தினால் பங்கேற்க தயார் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியதற்கு வரவேற்கதக்க நிகழ்வு என தெரிவித்தார்.
நீட் தேர்வு என்பது இந்த ஆட்சியின் ஸ்டாலினின் மோசமாக வாக்குறுதி எனவும் மாணவர்கள் தற்கொலைக்கு காரணமானவர்கள் ஸ்டாலின், உதயநிதி தான் மூன்றாமாண்டில் உள்ள திமுக அரசு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லாமல் திமுக குடும்பமே பித்தலாட்ட, மோசடி மக்களை ஏமாற்றுவதாக கூறினார்.
ஜல்லிகட்டு தீர்ப்பு எங்களால் தான் வந்தது என மார்த்தட்டிக்கொள்ளும் ஸ்டாலின் திமுகவினர் குண்டர்களை விட்டு ஜல்லிக்கடு போராட்டத்தில் கலவரத்தை உருவாக்கினார்கள்,.
மக்களை ஏமாளிகள் என கருதி நீட் தேர்வில் சிவில் வழக்கினை திமுகவினர் தொடர்ந்துள்ளதாகவும் மாணவர்களை ஏமாற்றுகிற அரசாக உள்ளதாக தெரிவித்தார்.
ஆளுநர் கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு அறிக்கை கேட்டதற்கு இதுவரை எந்த ஒரு விளக்கமும் தராமலும் என்ன கொடுப்பதென்று தெரியாத அரசாக திமுக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
0
0