கோவை சம்பவத்தை பற்றி கவலைப்படாமல், நயன்தாரா குழந்தை விவகாரம் பற்றி தமிழக அரசு கவலைப்படுகிறது : சி.வி. சண்முகம் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2022, 1:12 pm

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கடலூர் மாவட்டம் அதிமுக கிழக்கு, மேற்க்கு மாவட்ட செயலாளர்கள் அருள்மொழி தேவன்,பாண்டியன் தலைமையில் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என கூறி சிவி சண்முகத்திடம் மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த 21 கிராமங்களை சார்ந்தவர்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வேலைவாய்ப்பினை இன்று வரை நிறைவேற்றவில்லை எனவும் நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வேலை வழங்காமல் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு வழங்க இழப்பீடு வேண்டும் என்று தெரிவித்தார்.

நிலக்கரி சுரங்க நிர்வாகம் மற்றும் மத்திய அரசு இவ்விவகாரத்தில் தமிழக மக்களை வஞ்சித்து கொண்டிருப்பதாகவும், புதியதாக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 300 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை எனவும் தமிழர் தமிழ் மொழி என்று சொல்லி கொண்டு திரியும் ஸ்டாலின் அரசின் திமுக எம் பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

இதில் மக்களை ஏமாற்றும் வேலையை ஸ்டாலின் தலைமையிலான அரசு விட்டு விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனவும் இதற்காக சட்டமன்றத்தில் குழு அமைப்பதாக கூறிய ஸ்டாலின் இதுவரை குழு அமைக்கவில்லை என கூறினார்.

நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு 2005 க்கு பிறகு நெய்வேலி என் எல் சி நிர்வாகம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை தெரிவித்தார். மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகள் பயப்படுவதாக அமைச்சர் கேன் நேரு தெரிவித்தது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சிவி சண்முகம் தமிழக முதலமைச்சர் பயப்படுவதால் தான் தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்.

அதனால் தான் அமைதியாக படுத்துட்டு இருப்பதாகவும், கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கவலை படாமல் நடிகை நயன்தாரா குழந்தையை சட்டப்படி பெற்றாரா என்பது குறித்து தமிழக அரசு கவலை படுகிறது என சிவி சண்முகம் குற்றச்சாட்டினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 431

    0

    0