தமிழக அரசு வெளியிட்ட அரசாணை : உப்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 9:54 pm

தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட்டது குறித்து அரசாணை வெளியீட்டை தொடர்ந்து தூத்துக்குடியில் உட்பட தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உப்பள தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இன்று உப்பள தொழிலாளர் நல வாரியத்தை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உப்பள தொழிலாளர்கள் ஒன்று கூடி பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தேர்தல் கால வாக்குறுதியான மழைக்கால நிவாரணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட்டதற்கு உப்பள தொழிலாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?