தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நாளை டெல்லிக்கு அவசர பயணம் : இதுவா? இல்ல அதுவா? தமிழக அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2022, 8:51 pm

நீட் மசோதா விவகாரத்தில் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நாளை டெல்லி செல்ல உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் 11 மசோதாக்களை ஆளுநர் இதுவரை ஒப்புதலுக்காக அனுப்பவில்லை என திமுக அரசு குற்றம்சாட்டியது.

இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை ஆதினத்தை சந்திக்க சென்ற ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுகிறது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டதுடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நாளை டெல்லி செல்ல உள்ளார். மயிலாடுதுறையில் எதிர்ப்புகள் வலுத்ததால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து புகார் கூற செல்கிறாரா அல்லது, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக செல்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1129

    0

    0