சென்னை மாநகரில் 625 வழித்தடங்களில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கி வருகின்றன. தினசரி சுமார் 30 லட்சம் பேர் வரை இந்த பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
(Gross Cost Contract) எனும் ஒப்பந்த முறையில் அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளின் வரவு என்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியாகவே உள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கத்தின் மூலம் பேருந்துகளுக்காக காத்திருக்கும் நேரமும் குறையும்.
எனினும் இந்த தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் இயங்குமா அல்லது புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
தற்போது சென்னை மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், ஒருநாள் மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
This website uses cookies.