கல்வியில் தமிழகம் பின்தங்கியுள்ளது : வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 3:02 pm

தமிழகத்தில் மாணவர் சேர்க்கையில் முன்னிலையில் ஆனால் கல்வியில் சிலமாவட்டங்களிலும் முன்னிலையிலும் பல மாவட்டங்கள் பின் தங்கிய நிலையிலும் உள்ளது என தமிழக ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி நினைவு தின கூட்டம் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டார்.

இதில் சுதந்திரபோராட்ட தியாகிகள் அவர்களின் குடும்பத்தினர் முன்னாள் ராணுவ வீரர்கள் நேதாஜி படையில் பணிபுரிந்து வீரர்கள் குடும்பத்தினர் தேசிய மாணவர்கள் படை சாரணர் இயக்கம் நாட்டுநலத்திட்ட மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போன்றவர்கள் கலந்துகொண்டனர்

இக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ரவி கலந்துகொண்டு பேசுகையில், இந்திய சுதந்திர போருக்கு முதல் முதலில் வித்திட்ட 1806 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி வேலூரில் தான் துவங்கியது இந்த புரட்சி ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேற பலர் இன்னுயிர் தியாகம் செய்து ரத்தம் சிந்தி கிடைத்தது தான் இந்த சுதந்திரம்.

75 ஆம் ஆண்டில் இருக்கிறோம். இந்தியா உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக மாறி வருகிறது. தமிழகம் மாணவர் சேர்க்கையில் சேர்க்கை விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. ஆனால் பல மாவட்டங்களில் அது கல்வியில் பின் தங்கிய நிலையில் உள்ளது.

இந்தியா ஒரே குடும்பம் என நாம் நினைத்து செயல்பட வேண்டும். துப்புரவு தொழிலாளி முதல் உயரதிகாரி வரையில் பணியாற்றும் அனைவரும் அர்பணிப்பு உணர்வுடன் எந்த பணி ஆற்றினாலும் செயலாற்றுவது நாட்டிற்கு சேவை செய்வதை போன்றதாகும்.

ஆங்கிலேயர்கள் தான் நம்மை பிரித்தாலும் சூழ்ச்சியின் மூலம் பிரித்துவிட்டனர். குறிப்பாக வடக்கே ஆரியர்கள் தெற்கே திராவிடர்கள் என திராவிடம் என்பது மகாராஷ்டிரா, குஜராத்தில் ஒரு பகுதி, தெலுங்கானா ஆந்திரா, தமிழகம் கர்நடாக கேரளா போன்றவைகள் பூகோல ரீதியாக பிரித்தது தான் திராவிடம்.

ஆனால் இன ரீதியாக பிரிக்கப்பட்டதாக ஆங்கிலேயர்கள் தவறான வரலாற்றை பதிவு செய்துவிட்டனர். இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக அமையும் இளைஞர்கள் நாட்டு பற்றுடன் செயல்பட வேண்டும் என்று பேசினார் .

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் சார்பில் மனு அளிக்கப்பட்டது தேசிய மாணவர்கள் படையுடன் புகைப்படம் எடுத்துகொண்டு ஆளுநர் சிப்பாய் புரட்சி ஓவியங்களை பார்வையிட்டார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்