மதுவிற்பனையில் தமிழகம் முதலிடம்… இதென்ன பெருமையா? அன்புமணி ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2023, 1:54 pm

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி உள்பட பல இடங்களில் இன்று பா.ம.க. கட்சி கொடியேற்று விழாவிற்காக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி வந்தார்.அப்போது செய்திகாளர்களை சந்தித்த அவர், காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கடந்தாண்டு 685 டி.எம்.சி. காவிரியில் வீணாக கடலிலே கலந்தது. உபரிநீரை தருமபுரி மாவட்ட ஏரி குளங்களை நிரப்பும் திட்டம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு போராடியது.


காவிரி உபரி நீர் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டி பணியினை துவக்க வேண்டும். வாழ்வாதார பிரச்சனையாக உள்ள இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மொரப்பூர்-தருமபுரி ரெயில்வே திட்டமானது 75 ஆண்டு கால கனவுதிட்டம், பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் திட்டம் நடைபெறும். கவர்னர் ஆன்லைன் ரம்மி தடை சட்ட ஒப்புதல் தரவேண்டும். தற்கொலைகள் அதிகம் நடப்பதால் தடுக்கப்படவேண்டும்.
கவர்னருக்கு என்ன தயக்கம் என தெரியவில்லை.

ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ என சந்தேகம் எழுகிறது. இதுவரை 18 பேர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்து இருக்கிறார்கள். அதனால் இந்த தடை சட்டத்தில் கவர்னர் கையெழுத்திட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிலங்களை கையகபடுத்துவதை நிறுத்தவேண்டும். என்எல்சி வெளியேற வேண்டும்.
புதிய வீராணம் நிலக்கரி திட்டம், மூன்றாவது சுரங்க திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு, விரிவுபடுத்த திட்டத்திற்கு என விளைநிலங்களை, 91 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 35 ஆயரம் மெகாவாட்டாக உள்ளது, என்எல்சி நிறுவனத்தின் மின்சாரம் தேவைபடாது.

தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. நிலத்தை தரமாட்டோம் என விவசாயிகள் போராடி வருகின்றனர்.விவசாய நிலங்களை கையகபடுத்துவதை நிறுத்தவேண்டும். ராகுல்காந்திக்கு வழங்கியிருப்பது பெரிய தண்டனை, நீதிமன்றமும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை நீதிமன்ற தண்டனை என்பது தவறு தான். அவசரப்பட்டு பதவியை பறித்திருப்பதை பாஜக அரசு தவிர்த்திருக்கவேண்டும். இந்தியாவிலேயே மது விற்பனை தமிழகம் தான் அதிக விற்பனை. மது விற்பனையை குறைக்க தான் அமைச்சராக இருக்கிறார். ஆனால் அதை அமைச்சர் சரியாக புரிந்து கொள்ளவில்லை

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ