பாஜகவின் மதவாத அரசியலை எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான் : திருமாவளவன் பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan12 July 2022, 1:14 pm
இந்தியாவில் நீட் தேர்வு வேண்டாம் என கூறும் ஒரே மாநிலம் தமிழக அரசு தான், திமுக தான் ,மற்ற மாநிலங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை, இருந்தாலும் போராடும் குணம் இல்லை.
நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்ற பிற மாநிலங்களுக்கு துணிச்சல் இல்லை. தமிழக முதல்வர் துணிச்சல் மிக்கவராக மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளது போற்றுதலுக்குரியது.
இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் 8 கட்சிகளின் கூட்டணி உள்ளது. காங்கிரஸ் இடது சாரிகளை ஒரு அணியில் கூட்டுவது கூடாத காரியம். அதை திமுக தலைவர் சாதித்து காட்டியுள்ளார்.
நீட் தேர்வு வைத்து மாநில அரசின் கல்வி சார்ந்த அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கின்றனது. அதுதான் அவர்களின் நோக்கம். தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதால் நீட் தேர்வு கொண்டு வருகிறோம் என கூறினார்கள், ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு டொனேஷன் என வாங்கி கொண்டிருந்தது தற்போது fees ஆக பெறுகிறார்கள், கருப்பு பணம் பெற்றவர்கள் தற்போது வெள்ளை பணமாக பெறுகிறார்கள், இது மாறவில்லை.
நீட் வருவதற்கு முன்னும் மருத்துவ படிப்பிற்கு 1 கோடி செலவனது,நீட் தேர்வு வந்த பிறகும் 1 கோடி செலவாகிறது. புதிய கல்வி கொள்கை நிறைவேற்றப்பட்டால் திராவிட மாடல் என்னவெல்லாம் பேச முடியாது,
பிஜேபி ஒரு சராசரியான அரசியல் கட்சியல்ல,அது ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் அணி. ஆர்.எஸ்.எஸ், பிஜேபியை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அம்பேத்கர், பெரியாரை படித்தால் தான் புரிந்துகொள்ள முடியும் என பேச்சு.
அம்பேத்கரை சாதி தலைவராகவும், குல தெய்வமாக மட்டுமே பார்த்துள்ளனர் கொள்கை ரீதியாக புரிந்துகொள்ள வில்லை. திராவிட மற்றும் மார்க்சியம் சேர்ந்ததுதான் அம்பேத்காரியம் என கருத்து.
இலங்கையில் சிங்கள வெறி கொண்டு தமிழர்களை கொன்று குவித்தார்கள், இனவாதத்தை கையில் எடுத்து ராஜபக்ச க்கு பூமராங் போல அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது.கனவிலும் இப்படி நடக்கும் என நினைத்திருக்க மாட்டார்கள்.
பிஜேபியின் மதவாத அரசியலை எதிர்த்து இந்தியாவிலே குரல் கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் மற்ற மாநிலங்களில் மதவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பதில்லை.