கூடுகிறது தமிழக சட்டப்பேரவை… முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது : சபாநாயகர் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2024, 4:56 pm

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்.,12ல் துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.

அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் 2 நிமிடங்களில் தன்னுடைய உரையை முடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் மீதான விவாதமும் கூட்டத்தொடரில் நடைபெற்றது. பிப்.,21ம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மார்ச்சில் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியானது.

அதன்படி 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. இந்த நிலையில், ஜூன் 24ம் தேதி காலை 10 மணி முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: வடக்கில் பாஜகவுக்கு ஆப்பு வெச்சுட்டாங்க.. இப்ப நிதிஷ், சந்திரபாபு நாயுடுதான் கிங் மேக்கர் : ஜெயக்குமார்!

அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பின் எவ்வளவு நாட்கள் சட்டசபை நடக்கும் என்பது முடிவு செய்யப்படும் என்றும், மானிய கோரிக்கை மீதான விவாதம் எந்தெந்த நாட்களில் நடைபெறும் என்பது கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் அப்பாவு தெரிவித்தார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 260

    0

    0