ராமநாதபுரத்தில் தபால் ஓட்டுக்கள் நிராகரிப்பு.. நூலிழையில் மாறும் வெற்றி?.. ஷாக்கான தொண்டர்கள்..!
Author: Vignesh4 June 2024, 10:18 am
இந்திய நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக 543 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இதில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் மற்றும் கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், ஒரு தொகுதியை தவிர பெரும்பான்மையான தொகுதிகளில் இப்போது திமுக கூட்டணியே, முன்னிலை வகிக்கிறது.
வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில் இராமநாதபுரத்தில் சுமார் 30 சதவீத தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், காலை 8 மணிக்கு தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பல தபால் வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, முறையான கையெழுத்து இல்லை உள்ளிட்ட காரணங்களால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியே இராமநாதபுரத்தில் சுமார் 30 சதவீத தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், முகவர்கள் சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடியும் தருவாயில் இது தொடர்பாக முகவர்கள் மீண்டும் கேள்வி எழுப்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.
0
0