வருமான வரித்துறை பிடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி : வாடிக்கையாளர்கள் ஷாக்.. தூத்துக்குடியில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 1:38 pm

தூத்துக்குடியை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிரதான வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஆகும்.

தூத்துக்குடி வி,இ.ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் 10க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதால் அங்கு வங்கி அதிகாரிகள் தவிர வங்கியில் கணக்கு வைத்திருப்போர் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வருமானவரித்துறையினர் 4 கார்களில் சுமார் 16 பேர் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி