25 எம்பிக்களை ஜெயிக்க வெச்சிருந்தா பட்ஜெட்டில் தமிழ்நாடு வந்திருக்கும் : அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2024, 4:35 pm

நேற்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் தாக்கல் செய்திருந்தார். ஆனால் தமிழ்நாடு பெயர் அதில் இடம்பெறவில்லை, இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,மொத்த மத்திய பட்ஜெட் 48 லட்சம் கோடி ரூபாய். அதில் தமிழகத்திற்கு என திட்டங்கள் இருக்காதா என்ன.?

ரயில்வே பட்ஜெட் 2 லட்சத்து 62 ஆயிரம் கோடி. அதில் இந்தாண்டு தமிழகத்திற்கு அதிகம் வந்துள்ளது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் இருக்கிறது. பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயரையும் கூறிக்கொண்டு இருக்க முடியாது என கூறினார்

மேலும் படிக்க: தூசு தட்டப்படும் வழக்கு.. திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

மேலும், தமிழக மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து 25 எம்பிக்களை ஜெயிக்க வைத்து இருந்தால் தமிழ்நாட்டின் பெயர் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்று இருக்கும் என கூறிவிட்டு, பின்னர் , இது பதில் இல்லை சும்மா பேச்சுக்கு கூறினேன் என செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!