தமிழகத்திற்குள்ள வரவே விடுல.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டியே ஆக வேண்டும் ; அமைச்சர் உதயநிதி பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2024, 10:04 pm

தமிழகத்திற்குள்ள வரவே விடுல.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டியே ஆக வேண்டும் ; அமைச்சர் உதயநிதி பேச்சு!

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றன. அந்த வகையில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக மூன்று நாட்களுக்கு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது. புதிய கல்விக் கொள்கையில் 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கக் கூடாது என புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. நீட் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்

அவர் மறைந்ததும், திருட்டுத்தனமாக மத்திய அரசான பா.ஜ.கவுக்கு பயந்து அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர் என அவர் பேசினார்.

  • Sundar C birthday celebration 2025மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!