மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று காலை 8 மணி முதல் வாசிக்க தொடங்குகிறது தேர்தல் ஆணையம். 543 மக்களவைத் தொகுதிகளில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறது யாருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வரும் நிலையில், முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. பின்பு சுற்றுவாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், பாராளுமன்ற தேர்தலில் மக்களின் கவனத்தை பெற்ற வேட்பாளர்கள் மதியம் வரை பெற்ற வாக்கு விபரங்கள் வெளியாகி உள்ளது.
கோவை தொகுதியில், போட்டியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை 62,486 வாக்குகள் பெற்றுள்ளார். தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் 41,156 வாக்குகள் பெற்றுள்ளார். வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட மன்சூர் அலிகான் 618 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்ட தங்கர் பச்சான் 95, 261 வக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வீரப்பனின் மகள் வித்யா ராணி 18,717 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.
மயிலாடுதுறை தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட காளியம்மாள் 58,545 வாக்குகள் பெற்று நாலாம் இடத்தில் உள்ளார். விருதுநகர் தொகுதியில், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 55,376 வாக்குகள் பெற்றுள்ளார். விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட விஜய பிரபாகரன் 113,490 வாக்குகளை பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில், பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் 73,644 வாக்குகளை பெற்றுள்ளார். பெரம்பலூர் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் 65 ஆயிரத்து 744 வாக்குகளை பெற்றுள்ளார். தேனி தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டிடிவி தினகரன் 60,757 வாக்குகளை பெற்றுள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.