திருச்சி சூர்யாவை கை விட்ட பாஜக.. கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம்..!

Author: Vignesh
20 June 2024, 10:44 am

அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்து கொண்டு மற்ற பாஜக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து வந்த திருச்சி சூர்யாவை கட்சியிலிருந்து பாஜக அதிரடியாக நீக்கியுள்ளது.

தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!