இனி தெருவெங்கும் தமிழ் மணக்கும் : புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழசை எடுத்த அதிரடி முடிவு…தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2022, 12:35 pm

புதுச்சேரி : பாவேந்தர் பாராதிதாசனின் விருப்பப்படி புதுச்சேரியில் உள்ள தெருக்கள் பெயர்கள், கடைகளின் பெயர்பலகைகள் தமிழிலும் வைக்க வேண்டும் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசனின் 132வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது, புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை அருகே உள்ள பாரதிதாசனின் சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பாவேந்தர் பாராதிதாசனின் விருப்பப்படி புதுச்சேரியில் உள்ள தெருக்கள் பெயர்கள், கடைகளின் பெயர்பலகைகள் தமிழிலும் வைக்க வேண்டும் என்றும் அதை மாநில அரசும் அறிவுறுத்த வேண்டும் கூறினார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1299

    0

    0