ஈஷாவில் ‘தமிழ் தெம்பு’ திருவிழா : ஆதியோகி முன்பு மார்ச் 17-ன் தேதி வரை தினமும் நடைபெறும்!!
உலகின் தொன்மையான ஆன்மீக கலாச்சாரமான தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் விதமாக ‘தமிழ் தெம்பு’ என்னும் மண் சார்ந்த பண்பாட்டு கலை திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 17-ம் தேதி வரை தினமும் நடைபெற உள்ளது.
மஹாசிவராத்திரி விழாவை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழர்களின் ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய தமிழர் வாழ்வியல் கண்காட்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், ரேக்ளா பந்தையம், நாட்டு மாடுகள் கண்காட்சி மற்றும் சந்தை, பாரம்பரிய உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும், குதிரை சவாரி, ஒட்டக சவாரி, ராட்டிணம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற உள்ளது.
இந்நிகழ்ச்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மாலையில் பல்வேறு ஊர்களில் தலைச்சிறந்து விளங்கும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
முதலாம் நாளான இன்று (மார்ச் 9) மாலை 6 மணியளவில் திருப்பூரை சேர்ந்த கலைக் குழுவின் சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இது தவிர விழாவில், கைலாய வாத்தியம், ஆதியோகி திவ்ய தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
மேலும், இரண்டாம் நாளான நாளை மதுரையை சேர்ந்த கலை குழுவின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதோடு வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நாட்டு மாட்டு சந்தையும், மார்ச் 17 அன்று ரேக்ளா பந்தையமும் நடைபெற உள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.