மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயி வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய புஸ்ஸி ஆனந்த்!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2024, 1:14 pm

மாநாட்டுக்கு தனது சொந்த இடத்தை கொடுத்த விவசாயி வைத்த கோரிக்கையை புஸ்ஸி ஆனந்த் நிறைவேற்றி வைத்தார்.

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வருகின்ற 27 ஆம் தேதி நடைபெறுவதால் மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநாடு நடைபெறும் இடமானது 85 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளாதால் வி.சாலையை சார்ந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி ஒன்னரை ஏக்கர் நிலம் கொடுத்துள்ளார்.

வயதான விவசாயி என்பதால் தனது மனைவி ராஜாமணியுடம் வாழ்க்கையை நடத்தி செல்ல வழிவகை செய்யவேண்டுமென தமிழக வெற்றிக்கழகத்தினரை கேட்டு கொண்டுள்ளனர்.

விவசாயின் கோரிக்கையை ஏற்ற அக்கட்சியின் நிர்வாகியான திருவள்ளூரை சார்ந்த எம் டி மணி என்பவர் 36 ஆராயிரம் மதிப்பிலான கன்றுடன் கூடிய பசு மாட்டினை இன்று வாங்கி கொடுத்துள்ளார்.

அதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் முன்னிலையில் மாநாடு நடைபெறும் இடத்தில் வயதான தம்பதியினரிடம் ஆனந்த் வழங்கினார்.

வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்த வழிவகை செய்த அக்கட்சி நிர்வாகிகளுக்கும் விஜய்க்கும் வயதான தம்பதி நன்றி தெரிவித்துள்ளனர்.

  • S. J. Surya director comeback மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!
  • Views: - 437

    0

    0