தமிழ்நாட்டில் 3வது மூன்றெழுத்து முதலமைச்சர்.. த.வெ.க மாநாட்டிற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்..!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2024, 1:01 pm
மூன்றெழுத்துக் கொண்ட 3வது முதலமைச்சர் விஜய் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியா திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்தார்.
விஜய் நிச்சயமா அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியினை துவங்கினார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அண்மையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
மாநாட்டிற்கு தேவையான முன்னெடுப்பு வேலையில் தவெக நிர்வாகிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். மாவட்டம் வாரியாக மாநாட்டு பணிக்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க: கேள்வி கேட்ட பெண்ணை அறையில் அடைத்த பவுன்சர்கள்.. தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் அதிர்ச்சி!
இந்நிலையில் மதுரையில் தவெக மாநாட்டுக்கு மக்களை அழைக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த போஸ்டரில் முதலமைச்சர் இருக்கையில் விஜய் அமர்ந்திருப்பது போலவும், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு அழைக்கிறார்
” தமிழ்நாட்டின் மூன்றாவது மூன்றெழுத்து முதலமைச்சர் ” மாற்றத்தை விரும்பும் மக்களே !! அலை அலையாய் திரண்டு வாரீர் !!! நாளைய வரலாறு சொல்லட்டும் !!! என்கிற வாக்கியங்கள் அடங்கிய போஸ்டர்கள் மாநகரின் பல்வேறு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.