“நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழ்நாடு இனி சிறக்கும்”.. கோவையில் பறக்க துவங்கியது தவெக கொடி..!

Author: Vignesh
24 August 2024, 10:59 am

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி,.தீவிர அரசியலில் ஈடுபட்டு, 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார்.இதனை தொடர்ந்து தனது கட்சிக்கான கொடியை கடந்த இரு தினங்களுக்கு முன்பு பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஏற்றி வைத்தார்.

தமிழக அரசியலில் நடிகர் விஜயின் இந்த அடுத்த கட்ட மூவ்மெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் இன்னும் பரபரப்பாக இயங்க துவங்கி உள்ளனர். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டது.


முன்னதாக தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்கி சுந்தராபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கொடியேற்றினார். அதனை தொடர்ந்து கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றப்பட்டது.இதில் கலந்து கொண்ட தொண்டர்கள் நடிகர் விஜய் கூறிய, நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம் என முழக்கங்களை எழுப்பினர்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!