“இந்தி இசைனு யாராச்சும் கூப்டா இனிமே எனக்கு கெட்ட கோவம் வரும்”… தமிழிசை ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan20 March 2025, 4:45 pm
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரத்தனகிரி பாலமுருகன் திருக்கோவிலில் பாலமுருகனடிமை சுவாமிகளின் 58-ஆம் ஆண்டு மெய்ஞ்ஞானம் பெற்ற தினத்தை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடன் பேசிய அவர், திருச்செந்தூர் கோவிலில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் முருகன் அருள் திமுக அரசுக்கு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அப்படி இருந்தால் இப்தார் நோன்பு மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் ஏன் கோவில்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்பதில்லை என கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்க : இளைஞர்களை வலையில் வீழ்த்திய வடமாநில இளம்பெண்.. உல்லாச வாழ்க்கையால் உள்ளதும் போச்சு!
மேலும் மத்திய அரசு அறிவிக்கப்படாத தொகுதி மறு சீரமைப்பு குறித்து தமிழக அரசு பேசி வருவது ஏன் என்றும், அதேபோல் முன்மொழி கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக பேசி வருவதாக குறிப்பிட்டு இருந்தார் திருநெல்வேலி பகுதியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு கோரி வீடியோ வெளியிட்டும் அந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சென்னையில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதால் தலைநகரமா அல்லது கொலை நகரமா என கேள்வி எழுப்பினார்..

அதேபோன்று தமிழ் தமிழ் என்று கூறுபவர்கள் தமிழுக்காக என்ன செய்தீர்கள் என்றும் தமிழ் பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லப்பட்டதா புதிய தமிழ் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பட்டதன் கேள்வி எழுப்பினார்.
மேலும் 40 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் தோல்வி அடைந்துள்ளதாக எடுத்துக் கூறினார் . என்னை இந்தி இசை என கூப்பிட்டால் கெட்ட கோபம் வரும் என பேசிய தமிழிசை, கனிமொழி அவர்கள் சர்ச் பார்க் பள்ளியில் படித்தார், நான் 5ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் தான் படித்தேன். அதனால் எனக்கு உரிமை இருக்கு. தமிழ் உங்களுக்கு மட்டும் உரிமை என கூறுவது தவறு என பேசினார்.