புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

Author: Hariharasudhan
31 March 2025, 5:50 pm

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை: சென்னை அடுத்த மடிப்பாக்கத்தில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்கள் கட்சிக்கு (பாஜக) என்று தனி நடைமுறை உள்ளது. யாருக்கு என்ன வேலை கொடுத்தாலும் செய்யப் போகிறோம்.

அண்ணாமலை கட்சிக்காக உழைத்து வருகிறார். ஒவ்வொரு மாநிலமாக புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தமிழகத்துக்கு புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படலாம். ஏற்கனவே தலைவராக இருந்தவர்கூட மீண்டும் தலைவராகலாம்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழகம் முழுவதும் மாவட்ட, ஒன்றிய அளவில் தலைவர், செயலாளர் தேர்தல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழக பாஜக தலைவராக மீண்டும் அண்ணாமலையை நியமிக்க பாஜகவின் விதிகளில் விலக்கு இருந்தால் உண்டு என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

Annamalai TN BJP President

மேலும், 2026 தேர்தலில் மீண்டும் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அண்ணாமலையே மீண்டும் தமிழக பாஜக தலைவராகத் தொடர அக்கட்சி தொண்டர்கள் விரும்பினாலும், அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க அதிமுக தரப்பில் நிர்பந்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

இந்த நிலையில், மீண்டும் அண்ணாமலையே தமிழக பாஜக தலைவராகத் தொடர்வார் என்பதையே அக்கணம் வைத்து தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளதில் தெரிய வருகிறது. மேலும், தமிழக பாஜக தலைவராக ஆளும் திமுகவை எதிர்த்து அண்ணாமலையின் செயல்பாடுகள் நிறைவாகவே டெல்லிக்குச் சென்றுள்ளதாகவும் கூறப்படுவதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…
  • Leave a Reply