அவ்வளவு பலவீனமானவரா திருமாவளவன்? முதல்வருக்கு பயம்.. தமிழிசை சரமாரி கேள்வி!

Author: Hariharasudhan
6 December 2024, 6:19 pm

திருமாவளவன் அம்பேத்கரை சிறப்பு செய்கிறாரா அல்லது கூட்டணியைச் சிறப்பு செய்கிறாரா என பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை: சென்னையில், இன்று (டிச.06) பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தமிழிசை செளந்தரராஜன், “இன்று திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய கரும்புள்ளி. அவர் அம்பேத்கரை சிறப்பு செய்கிறாரா? அல்லது கூட்டணியைச் சிறப்பு செய்கிறாரா? இரண்டு பேரையுமே தவறிழைத்தவர்களாகத் தான் நான் பார்க்கிறேன்.

Tamilisai Soundararajan on Thirumavalavan

நாம், எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்று முதலமைச்சர் அவரை அனுப்பி வைத்திருக்க வேண்டும். எப்படி பிரதமர் மோடி ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்தாரோ, அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் திருமாவளவனை அனுப்பி வைத்திருக்க வேண்டும். முதலமைச்சருக்கு பயந்துதான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க திருமாவளாவன் மறுக்கிறார்” எனக் கூறினார்.

Tamilisai Soundararajan on TVK Vijay

முன்னதாக, திருமாவளவன் வெளியிட்டு உள்ள விளக்க அறிக்கையில், “மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே. எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே.

இதையும் படிங்க: 21 வயதில் ரெண்டு குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை…ஷாக் ஆன ரசிகர்கள்..!

என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்? நமக்கென்ன ஆதாயம் என்று கணக்குப் பார்க்காமல், நமது கொள்கை பகைவர்களின் சூது – சூழ்ச்சிக்குப் பலியாகி, அவர்களின் நோக்கம் நிறைவேற இடமளித்துவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வோடு தானே நாம் முடிவெடுக்க இயலும்” எனத் தெரிவித்து இருந்தார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 111

    0

    0