தமிழகம்

திமுக ‘இந்த’ தோற்றத்தை உருவாக்குகிறது.. தமிழிசை கடும் சாடல்!

பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி 2026ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. திமுக அரசு தமிழகத்தில் மொழி அரசியல் செய்து வருகிறது.

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வர், மருத்துவமும், கல்வியும் இரு கண்கள் என்கிறார். ஆனால் அவர் அரசு மருத்துவமனையில் ஊசி போட்டுக் கொள்வதில்லை. தனியார் மருத்துவமனைக்குத்தான் செல்கிறார்.

அமைச்சர்களின் மகன்கள் மற்றும் பேரன்கள் எங்கு படிக்கின்றனர் என அனைவருக்கும் தெரியும். திமுக அரசு மொழி விஷயத்தில் அப்பட்டமாக நடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜக அரசு எந்த விதத்திலும் இந்தியைத் திணிக்கவில்லை.

பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது. தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டுள்ளது. பாஜகவின் கொள்கையில் உண்மையாக பற்று கொண்ட தொண்டர்களும், தலைவர்களும் கட்சியிலிருந்து விலக முடியாது.

பாஜக உறுதித் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். அரசியலுக்காக குழந்தைகளைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, திறன் வளர்ப்பு, தொழில்நுட்ப அறிவு, விரிவுபடுத்தப்பட்ட கல்வி என அரசு மாணவர்களுக்குத் தேவையானவை இருக்கிறது.

இதையும் படிங்க: ’தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும் என..’ பாஜக ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு!

தமிழக முதல்வரின் பேரன்கள் எங்கு படிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ரயில் நிலையங்களில் இந்தி எழுத்தை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் இதனால் பாதிக்கப்படுவார்கள். திமுக அரசு பகுதி நேர ஆசிரியர்களையும், பகுதிநேர மருத்துவர்களையும் நிரந்தரம் செய்வதாக கூறியது. ஆனால், செய்யாமல் இரட்டை வேடம் போட்டு வருகிறது.

ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களான விஸ்வகர்மா திட்டம், நீட் ஆகியவற்றை தடுக்கிறார். பிரதமரின் மருந்தகத் திட்டத்தினை, மக்கள் மருந்தகம் என பெயர் மாற்றி அமல்படுத்தி உள்ளனர். மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது” என தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

Hariharasudhan R

Recent Posts

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

50 minutes ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

55 minutes ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

2 hours ago

3 மகள்களுக்கு தாயான பிரியங்கா.. 2வது கணவர் வசி குறித்து பரபரப்பு தகவல்!

பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…

2 hours ago

ஜெனிலியாவையே மறந்துட்டீங்களேப்பா- சச்சின் பட துணை நடிகைக்கு திடீரென குவிந்த ரசிகர்கள்

சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…

2 hours ago

Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?

90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…

3 hours ago

This website uses cookies.