ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை கடிதம்.. நிருபர்கள் எழுப்பிய கேள்வி.. அண்ணாமலை தந்த ரியாக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2024, 2:45 pm

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை கடிதம்.. நிருபர்கள் எழுப்பிய கேள்வி.. அண்ணாமலை தந்த ரியாக்ஷன்!!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார்.2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ரோட் சோவில் பங்கேறுகிறார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் L. முருகன், பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் ஆர்.எஸ் புரம் தபால் நிலையம் எதிரில் உள்ள மலரஞ்சலி செலுத்தும் இடத்திற்கு வந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் ரோட் சோ நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்ததாக தெரிவித்தார்.

எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு அவர்களுடன் இணக்கமாக இருந்து இந்த பேரணி நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.

கோவை வாழ் மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் ஆதரவை திரட்ட பிரதமர் மோடி வருவதாக தெரிவித்தார். கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மலரஞ்சலி செலுத்த இருப்பதாக கூறினார்.

இதற்கான முன் அனுமதியும் பெறப்பட்டு உள்ளது என்று கூறியவர், தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களில் இஸ்லாமியர்களும் அடக்கம், இவர்கள் அனைவருக்கும் சேர்த்து தான் பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்துவதாக தெரிவித்தார்.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து இரண்டு நாட்களில் முடிவு தெரிவிக்கப்படும் என்றார். தமிழிசை ராஜினாமா குறித்து கேட்டதற்கு, தற்பொழுது தான் செய்திகள் வந்து உள்ளதாகவும் அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 217

    0

    0