கழிவுகள் கொட்டும் இடமா தமிழக எல்லை? கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை கொட்டி செல்லும் மர்மநபர்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2023, 1:28 pm

சமீப காலமாக கேரளாவில் இருந்து எடுத்து வரும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.

இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில் காவல் துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரபடுத்தியுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் இருந்து மினி ஆட்டோ கோழி கழிவுகளை ஏற்றி வந்த மர்ம நபர்கள் வாளையாறு எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டியுள்ளனர்.

இதனை கண்ட உள்ளூர் இளைஞர்கள் இது குறித்து கேட்ட போது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து ஊர் மக்களையும் அழைத்து, சட்ட நடவடிக்கை எடுக்கபதாக கூறி எச்சரிக்கையை அடுத்து, அந்த நபர்கள் மீண்டும் கோரி கழிவுகளை அள்ளி ஆட்டோவில் எடுத்துச் சென்றனர்.

இதனிடையே இளைஞர்கள் கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் ஆட்டோவில் கோழி கழிவுகள் எடுத்து வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 387

    0

    0