தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு 24,418… இன்று மட்டும் 46 பேர் பலி : மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம் தெரியுமா..?
Author: Babu Lakshmanan29 January 2022, 7:48 pm
சென்னை : தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 24,414 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 27,885 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 33,03,702 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 46 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை உயிரிழப்பின் எண்ணிக்கை 37,412-ஆக உள்ளது.
இதுபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 27,885 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 30,57,846 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,08,350 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 4,508 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கோவையில் 3,309 பேருக்கும், செங்கல்பட்டில் 1,614 பேருக்கும், திருப்பூரில் 1,649 பேருக்கும், சேலத்தில் 1,264 பேருக்கும், ஈரோட்டில் 1,195 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.