மீண்டும் தமிழகத்தை அலறவிடும் கொரோனா.. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 9:26 pm

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு முதல் உலகையே கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் எத்தனையோ உயிர்கள் இந்த தொற்றுக்கு பலியாகின. குறிப்பாக, இந்தியாவிலும் கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளினால் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு முற்றிலும் ஒழிக்கப்படா விட்டாலும், ஆங்காங்கே ஒன்று, இரண்டு பாதிப்புகள் கண்டறியப்பட்டு வந்தன. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் கடந்த சில தினங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 272 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 1366ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சென்னை, கோவையில் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. சென்னையில் 82 பேருக்கும், செங்கல்பட்டு, கன்னியாகுமரியில் தலா 26 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 3475

    0

    0