புனிதமான திருப்பதி கோவிலில் தமிழக பக்தர்கள் செய்த அநாகரீகமான செயல்.. போலீசார் ஆக்ஷன்!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2025, 11:48 am

இந்துக்களின் புனித ஸ்தலமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் வழங்குகிறது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

எனவே இங்கு புனித தன்மையை காப்பாற்றும் விதமாக திருமலையில் மது, மாமிசம், புகையிலை, குட்கா போன்றவை பயன்படுத்தவும் விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறி கொண்டு வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

இதையும் படியுங்க: திருப்பதிக்கு சென்ற மதுரை மூதாட்டி மாயம்… வனப்பகுதிக்குள் வழிதவறி சென்ற சிசிடிவி காட்சி வைரல்!

இதற்காக அலிபிரி டோல்கேட்டில் பக்தர்களின் உடைமைகள் முழு சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் திருமலை ராம்பகிஜா பஸ் நிலைய வளாகத்தில் தமிழக பக்தர்கள் சிலர் அவித்த கோழி முட்டைகள் மற்றும் வெஜ் புலாவ் சாப்பிட்டு கொண்டுருந்தனர். இதனை கண்ட அங்கிருந்த சக பக்தர்கள் உடனடியாக
போலீசில் புகார் அளித்தனர்.

பக்தர்களிடமிருந்து புகார் வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பக்தர்களின் உணவை பறிமுதல் செய்தனர்.திருமலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என பக்தர்களை கண்டித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Devotees Eat Non veg in Tirupati temple campus

அலிபிரி சோதனைச் சாவடியில் பக்தர்கள் உடமைகள் சோதனைசோதனை செய்வதில் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் எனவும் தடைசெய்யப்பட்ட உணவு சோதனைச் சாவடியைத் தாண்டி திருமலைக்கு எப்படி வந்தது என சக பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

  • Vijay And Trisha திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!