“சாராயம் குடிச்சு செத்தா 10 லட்சம், வெடி விபத்துல செத்தா 3 லட்சமா?”-உதயநிதியை கலாய்த்த ராஜேந்திர பாலாஜி!

Author:
25 June 2024, 9:36 am

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருநாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுகவினர் திமுக அரசே கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திமுகவை கண்டித்து பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,
கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களுக்கு மட்டும் தலா 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது.இதே போல் வெடி மருந்து தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு 3 லட்சம் தான் வழங்கியுள்ளார். ஆனால் அந்த மூன்று லட்சம் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரை போய் சேரவில்லை.இருப்பினும் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் வீடுகள் உள்ள பகுதிக்குச் சென்று வீடு வீடாக உதயநிதி ஸ்டாலின் 10 லட்சத்தை வழங்கி வந்தார். எப்படி போனால் என்ன போனது உயிர் தானே? பாரபட்சம் பார்க்காமல் தொகையை கொடுக்க வேண்டும் என்று உதயநிதியை சுட்டிக்காட்டி பேசினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!